ஈரோடு போக்குவரத்து அலுவலகத்தில் வரும் 29ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்

ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29ம் தேதி ஏலம் நடக்கிறது.;

Update: 2022-04-20 13:45 GMT

பைல் படம்

போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத, இதர குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 69 வாகனங்கள், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளன. இவற்றை கடந்த 11-ந் தேதி ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாக காரணத்தால் ஏலம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வரும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் விடப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதிக்கு பின் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி, ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் பெறலாம். ஏற்கனவே செலுத்தியவர்கள் வரும் 27ம் தேதி வரை ரசீதை காண்பித்து படிவம் பெறலாம். பூர்த்தியான விண்ணப்பம் வரும் 28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் திரும்ப வழங்க வேண்டும். ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாளில் வரும் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News