ஈரோட்டில் புதிய போக்குவரத்து சிக்னல்; எஸ்பி ஜவகர் துவக்கி வைப்பு
ஈரோடு காளை மாட்டு சிலை சந்திப்பில் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னலை எஸ்பி ஜவகர் செவ்வாய்க்கிழமை துவங்கி வைத்தார்.
ஈரோடு காளை மாட்டு சிலை சந்திப்பில் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னலை எஸ்பி ஜவகர் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை (நேற்று) துவங்கி வைத்தார்.
ஈரோடு மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக ரயில்வே ஸ்டேஷன் அருகே காளை மாட்டு சிலை ரவுண்டானா உள்ளது. இதனை கடந்த சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புனரமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது. இதையடுத்து காளைமாட்டு சிலை சந்திப்பில் எஸ்கேஎம் நிறுவனம் சார்பில் புதிய போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று (27-ம் தேதி) நடைபெற்றது. இதில், ஈரோடு எஸ்பி ஜவகர் பங்கேற்று போக்குவரத்து சிக்னலை ரிமோட் மூலம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், எஸ்கேஎம் அனிமல் பீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம், பயிற்சி ஏஎஸ்பி ஷஹ்னா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோமதி, ராஜபிரபு, எஸ்கேஎம் நிறுவன மனதவளத்துறை அதிகாரிகள் ராஜேந்திரன், பரமேஸ்வரன், பூர்ணா ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளர்கள் உத்தமராமன், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், காளைமாட்டு சிலையில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு எப்போதும் போல பராமரிக்கப்படும் என அந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.