சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,452-க்கு ஏலம்.

Update: 2021-12-03 01:30 GMT

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.அதன்படி நேற்று ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 3 டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,452-க்கும், முல்லை ரூ.880-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.85-க்கும், பட்டுப்பூ ரூ.76-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.1,250-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.420-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Tags:    

Similar News