சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் வியாழக்கிழமை (இன்று) முல்லைப்பூ கிலோ ரூ.1,190க்கு விற்பனையானது.;
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் வியாழக்கிழமை (இன்று) முல்லைப்பூ கிலோ ரூ.1,190க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
இந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு காலம் என்பதால் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், வரத்து குறைந்ததால் பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை (பிப்.22) இன்று நடைபெற்ற ஏலத்தில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-
மல்லிகைப்பூ - ரூ.940 ,
முல்லைப்பூ - ரூ.1,190 ,
காக்கடா - ரூ.400 ,
செண்டு மல்லி - ரூ.57 ,
கோழிக்கொண்டை - ரூ.120 ,
ஜாதி முல்லை - ரூ.750 ,
கனகாம்பரம் - ரூ.400 ,
அரளி - ரூ.100 ,
துளசி - ரூ.40 ,
செவ்வந்தி - ரூ.160க்கும் விற்பனையானது