அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சசிகலா இன்று வருகை

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் சுவாமி தரிசனம் செய்ய, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று வருகை தருகிறார்.;

Update: 2022-04-12 01:30 GMT

சசிகலா

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் சுவாமி தரிசனம் செய்ய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று வருகை தருகிறார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு இன்று காலை 10.30 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார். இதையடுத்து தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை சார்பில், சசிகலாவை வரவேற்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News