பவானி புதிய பேருந்து நிலையம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பவானி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கை மீட்டெடுக்கும் வகையில், 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-05-14 10:15 GMT

மரக்கன்று நடும் விழாவில் எடுக்கப்பட்ட படம்

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கில் 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகத்தினர், கடந்த சில வருடங்களாக கொட்டி வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு அகற்றுமாறு வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது குப்பை கிடங்கை மீட்டெடுக்கும் வகையில் குப்பைகளை சுத்தம் செய்யப்பட்டு அப்பகுதியில் 250 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆணையாளர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் மா, வேம்பு, புங்கமரம் உள்ளிட்ட நாட்டு வகை மரங்கள் மட்டுமே நடவு செய்யப்பட்டு இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆண்டுகள் குப்பை கிடங்காக இருந்த பகுதி தற்போது மரம் வைக்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News