ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 பேருக்கு குண்டாஸ்
Erode News Tamil -ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
Erode News Tamil -ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் சிறுமியின் தாயார் சுமையா என்கின்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு தந்தை சையத்அலி , இடைத்தரகர்ளாக செயல்பட்ட மாலதி மற்றும் ஆதார் கார்டை திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தின் அடைப்பதற்கான கடிதத்தை வழங்கினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2