பவானி அருகே கிணற்றுக்குள் தத்தளித்த மயில் பத்திரமாக மீட்பு

பவானி அருகே கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்மயிலை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு தோட்டப் பகுதியில் விட்டுச் சென்றனர்.

Update: 2022-03-28 14:30 GMT

கிணற்றுக்குள் தத்தளித்த மயிலை பத்திரமாக மீட்ட பவானி தீயணைப்பு துறையினர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலேண்டேஸ்வர். விவசாயி. இவரது விவசாயி தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டர் போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது கிணற்றினுள் மயில் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தபோது கிணற்றுள் பெண்மயில் தண்ணீரில் தத்தளித்துக் போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து விவசாயி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த பெண் மயிலை பாதுகாப்பாக மீட்டு ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய தோட்டப் பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News