கோபிசெட்டிபாளையம் அருகே ஆம்னி வேன் பறிமுதல்
கோபிசெட்டிபாளையம் அருகே சொந்த பயன்பாட்டிற்காக ஆம்னி வேனில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆம்னி வேனை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேனை படத்தில் காணலாம்.
சொந்த பயன்பாட்டிற்கான ஆம்னி வேனில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல கூடாது என்ற நிலையில், சொந்த ஆம்னி வேனில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதாக கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்தன.
இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில், பள்ளி குழந்தைகளை ஏற்றிச்கொண்டு சென்ற ஆம்னி வேன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.