சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3 கோடி உதவித்தொகை: மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு ‌

சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3 கோடி உதவித்தொகை பெற்ற மாணவிக்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சென்று பாராட்டு.;

Update: 2021-12-22 14:00 GMT

மாணவிக்கு பாராட்டு தெரிவித்த எம்எல்ஏ சரஸ்வதி.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன்-சுகன்யா தம்பதியினரின் மகள் ஸ்வேகா. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும், ஸ்வேகாவுக்கு மூன்று கோடி ரூபாய் உதவித்தொகையுடன் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகி டெக்ஸ்டெரிட்டி குளோபல் சரத் என்பவரின் மூலம் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்ட மாணவி ,10 ஆம் வகுப்பு முதலே அவரிடம் ஆன்லைனில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 


அதன் பயனாக ஸ்வேகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து, மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த செய்தியினை அறிந்ததும், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி எம்எல்ஏ மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News