ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.69 கோடி பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.2.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-01 06:30 GMT
பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.2.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று (ஏப்ரல் 1) திங்கட்கிழமை காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.70 லட்சத்து 51 ஆயிரத்து 997ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.58 லட்சத்து 11 ஆயிரத்து 390ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.21 லட்சத்து 41 ஆயிரத்து 280ம், பவானி தொகுதியில் ரூ.18 லட்சத்து 78 ஆயிரத்து 800ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850ம், கோபி தொகுதியில் ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 650ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.66 லட்சத்து 96 ஆயிரத்து 778ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 13 ஆயிரத்து 415 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.1 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.97 லட்சத்து 23 ஆயிரத்து 820 ரூபாய் தொடர்புடைய கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News