அந்தியூர் அருகே கூரை வீடு தீ பிடித்து சேதம்
அந்தியூர் அருகே மின் கசிவால் டீக்கடை உரிமையாளர் வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாசலியூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர், பணங்காட்டு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கூரை வீட்டில் இன்று மின்கசிவால் தீப்பிடித்தது. அந்தியூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று போராடி தீயை அணைத்தனர். விபத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின.