முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்: ஈரோடு மாவட்டத்தில் 256 கி.மீ., நீளத்திற்கு சாலைகள்

ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 208 பணிகள் 256 கி.மீ நீளத்திற்கு ரூ.82.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-11-18 02:00 GMT

ஈரோடு மாவட்டம் பேரோடு கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 208 பணிகள் 256 கி.மீ நீளத்திற்கு ரூ.82.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் முக்கியமான ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள சாலைகளை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் பேருந்துகள் இயங்கும் சாலைகள், குடியிருப்புகளுக்கு சாலைகள், பின்தங்கிய தொகுதிகள், ஒற்றை இணைப்பை வழங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடியிருப்புகளை இணைக்கும் சாலைகள், 3 கி.மீ.க்கு மேல் நீளமுள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, பை-பாஸ் சாலைகளை உள்ளிட்ட 1க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து சாலைகள் வழியாக செல்லும் சாலைகள் போன்றவை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2022-2023ம் ஆண்டில் தார் தளம் வலுப்படுத்துதல், தார் தளம் புதுப்பித்தல் பணிகள், கப்பி சாலைகள் குறுக்கு வடிகால் பணி 1 எண்ணிக்கை அல்லது குறைவாக உள்ள சாலைப் பணிகள், கப்பி சாலைகள் குறுக்கு வடிகால் பணி 1 எண்ணிக்கைக்கு மேல் உள்ள சாலைப் பணிகள் என 213 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 208 பணிகள் 256 கி.மீ நீளத்திற்கு ரூ.82.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், 2024-2025ம் ஆண்டிற்கு 65 பணிகள் 62.478 கி.மீ நீளத்தில் ரூ..22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம், பேரோடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் "நிறைந்த மனதுடன்" தெரிவித்தாவது, நாங்கள் இப்பகுதியில் பல வருடமாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் அன்றாட வேலைகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றோம்.

மேலும் நடந்து சென்றும் பணிகளை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், மழை காலங்களில் சேரும் சகதியுமாக இருக்கும். இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வருவதும், மேலும் நடந்து செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் மிகவும் சிரமாக இருந்தது.

தற்பொழுது, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், எங்கள் பகுதியில் சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் எளிதாக உள்ளது. நாங்கள் தினமும் சாலைகளில் நடந்து சென்று வேலைக்கு செல்வதற்கும் சிரமமின்றி உள்ளது.

குண்டும், குழியுமான சாலையினை மேம்படுத்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் பகுதி மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

Tags:    

Similar News