ஈரோடு - சென்னிமலை சாலையில் வெள்ளோடு பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி

ஈரோடு - சென்னிமலை சாலையில், வெள்ளோடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

Update: 2024-12-07 11:45 GMT

ஈரோடு - சென்னிமலை சாலையில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு - சென்னிமலை சாலையில், வெள்ளோடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு - சென்னிமலை சாலையில் வெள்ளோடு கள்ளுக்கடைமேட்டில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணியினை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (டிச.7) துவக்கி வைத்தார்.

ஈரோடு - சென்னிமலை சாலையானது (ஈரோடு ரயில் நிலையம் முதல் சென்னிமலை வரை) ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்படும் மாவட்ட முக்கிய சாலை ஆகும். இச்சாலையானது ஈரோடு, சென்னிமலை, காங்கேயம் மற்றும் தாராபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு இணைப்பு சாலையாக பயன்படுகிறது.


இச்சாலையை அகலப்படுத்துவதால் சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக செல்லும் பயணிகள் பயனடைகிறார்கள். இச்சாலையில் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்துறை பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிகள் போன்ற அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. மேலும், புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோயில் இச்சாலையில் அமைந்துள்ளது.

அதன்படி, இச்சாலையினை அகலப்படுத்தி நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைத்து மேம்பாடு செய்தல் பணி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ் ரூ.7  கோடி மதிப்பீட்டில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். இச்சாலைப்பணி ஆறு மாதங்களுக்குள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்நிகழ்வின் போது, உதவி பொறியாளர் மணிகண்டன், ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செங்கோட்டையன், ஈரோடு மாநகர திமுக செயலாளர் மு.சுப்ரமணியம், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் சுள்ளான் ராஜேந்திரன், உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News