அந்தியூரில் சாலை பாதுகாப்பு வார விழா
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அந்தியூர் போக்குவரத்துகாவலர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்;
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அந்தியூர் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போது எடுத்த படம்.
நாடு முழுவதும் சாலை போக்குவரத்தில் விபத்துக்கள், அதிக அளவு ஹெல்மெட் அணியாமலும், தலைக்கவசம் , நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் செல்வதாலும் சாலையைக் கடக்கும்போது செல்போன் பேசியபடி செல்வதால் , வாகன ஓட்டிகள் செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டுவதால் விபத்துக்கள் அதிக அளவு நடக்கின்றது. அவ்வாறு, அதிக அளவில் விபத்துக்கள் தமிழகத்தில் தான் நடக்கின்றன.
சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கு மத்திய மாநில அரசுகள் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் காவல்துறை மூலம் பல்வேறு அறிவுரைகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சீட்பெல்ட் அணிதல் ஹெல்மெட் லைசென்ஸ் (ஓட்டுநர் உரிமம்) இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.