பவானியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி

Road Safety Awareness Rally சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி பவானியில் நடைபெற்றது.;

Update: 2024-02-13 05:15 GMT

குமாரபாளையத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஜேகேஎன்என் கல்லுாரி தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் எஸ்.ஓம் சரவணா, பவானி நகராட்சி தலைவர்

சிந்துாி இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

Road Safety Awareness Rally

சாலைப் பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி பவானியில்  நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜேகேகேஎன் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு கல்லூரி தலைவர் செந்தாமரை முன்னிலை தாங்கினார். நிர்வாக இயக்குனர் எஸ்.ஓம் சரவணா, பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும். மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது. வாகனத்தை திருப்பும்போது சிக்னல் செய்ய வேண்டும். வாகனத்தின் பின்புறம் சிவப்பு விளக்கு அவசியம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இரவில் எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஒளியைக் குறைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் முன்பாகத் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

இதில், அறுவை சிகிச்சை துறை தலைவர் ரேகா, இணை பேராசிரியர் விஜய் தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் பவானி போக்குவரத்து போலீசார் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News