ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தாெற்று: இன்று ஒரே நாளில் 7 பேர் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-06-17 14:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 1 என்று இருந்தது. நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு பாதிப்பு உறுதியானது. தற்போது 19 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 953 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Tags:    

Similar News