ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடந்தது.;

Update: 2024-07-30 09:45 GMT

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (30ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (30ம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் ஆணையருமான (வருவாய் நிருவாகம்) ஜி.பிரகாஷ் தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சமத்துவபுர குடியிருப்புகள், குடிநீர் விநியோகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0 உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையிலும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் இருக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் நர்னரே மனிஷ் சங்கர்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பிரேமலதா (நிலம்), செல்வராஜன் (வளர்ச்சி), ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) அம்பிகா உட்பட அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News