அந்தியூர் புதுமேட்டூர், பிரம்மதேசம் பகுதிகளில் புதிய கேஸ்பங்க் அமைக்க ஆய்வு
புதுமேட்டூர்,பிரம்மதேசம் ஆகிய இடங்களில் புதிய கேஸ் பங்க் அமைக்க அனுமதி கோரிய இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
அந்தியூர் அருகேயுள்ள புதுமேட்டூர் மற்றும் பிரம்மதேசம் ஆகிய இடங்களில் புதிய கேஸ் பங்க் அமைக்க அனுமதி கோரிய இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புது மேட்டூர் மற்றும் பிரம்மதேசம் ஆகிய இரண்டு இடங்களில் புதுடய கேஸ் பங்க் அமைப்பதற்கு, அதன் உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், அந்தியூர் அத்தாணி சாலையில் புது மேட்டூர் அருகில் கேஸ் பங்கிற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
இதேபோல், பிரம்மதேசத்தில் புதிய கேஸ் பங்கிற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு, கேஸ் பங்க் அமைக்க ஏதுவான இடமா என ஆய்வு நடத்தினார். அப்போது, அந்தியூர் வட்டாட்சியர் விஜயக்குமார், வருவாய் அலுவலர் அபிராமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.