உக்ரைனில் படிக்கும் அந்தியூர் மாணவியை இந்தியாவுக்கு அழைத்து வர கோரிக்கை

உக்ரைனில் அந்தியூரை சேர்ந்த மருத்துவ மாணவி உட்பட பலர் தவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-24 12:15 GMT

மாணவி மௌனி சுகிதா.

உக்ரைனில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த மருத்துவ மாணவி உட்பட பலர் தவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு தங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதையடுத்து, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலிருந்து மருத்துவம் படிக்க உக்ரைன் சென்ற மாணவ மாணவிகள் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகள் மெளனி சுகிதா, உக்ரைனில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ மாணவி மௌனி சுகிதாவின் பெற்றோர்கள், அவர்களை இந்தியா அழைத்து வர, மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி, மருத்துவ மாணவி மௌனி சுகிதா, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அங்குள்ள நிலைமை பற்றியும் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

Tags:    

Similar News