கீழ்வாணி அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா
கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குடியரசு தினவிழா அரசின் வழிகாட்டுதலின்படி நடந்தது.
கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ், தேசிய நல்லாசிரிசியர் விருது பெற்ற ராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.