ஈரோடு மாநகராட்சியில் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.;
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு 4 மண்டலங்களிலும் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் துப்புரவு ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதன்பேரில், 4 மண்டலங்களிலும் பணியாற்றிய 12 துப்புரவு ஆய்வாளர்கள் இன்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடத்தில் பணியாற்றினர்.