பவானிசாகர் அணையில் இருந்து 25,000 கன அடி உபரிநீர் திறப்பு

Bhavanisagar Dam Water Level Today In Tamil- பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-08-09 02:45 GMT

bhavanisagar dam water level today-பவானிசாகர் அணை.

Bhavanisagar Dam Water Level Today In Tamil- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 20,200 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீராக வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,600 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரிநீராக 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்படுவதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News