உதயநிதி பிறந்த நாள் விழாவையாெட்டி பவானியில் நாளை ரேக்ளா குதிரை பந்தயம்
ஈரோடு மாவட்டம் பவானியில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை மாபெரும் ரேக்ளா குதிரை பந்தயம் நடைபெறுகிறது.;
பவானி சத்தி ரோட்டில் காடையம்பட்டி அருகே நாளை குதிரைப் பந்தயம் நடைபெறுகிறது.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பவானி நகர திமுக, இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆதரவற்ற ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக நகரச் செயலாளர் ப.சீ. நாகராஜன் கூறுகையில், நகர திமுக சார்பில் ஐயப்ப சேவா சங்க மண்டபத்தில் இரத்த தான முகாம் நடைபெறுகிறது.
மேலும் வார்டு தோறும் திமுக சார்பில் பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்த பரிசுகள் வழங்கப்படுகிறது. பவானி சங்கமேஸ்வரர் கோயில் பகுதியில் ஏழை, எளியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பவானி சத்தி ரோட்டில் காடையம்பட்டி அருகே நாளை (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை குதிரைப் பந்தயம் நடைபெறுகிறது. மேலும், இளைஞர்களுக்கு இறகுப் பந்துப் போட்டிகள், கிரிக் கெட் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ப.சீ.நாகராஜன் தெரிவித்தார்.