பவானிசாகரில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.;
நித்திஷ்குமார்.
கோயமுத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நித்திஷ்குமார் (வயது 18). தனியார் மில் தொழிலாளி.இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் பவானிசாகர் அணை நீர்த் தேக்க பகுதியில் பரிசலில் பயணித்தார். கரிமொக்கை என்ற நீர்த்தேக்க பகுதியில் சென்றனர். அப்போது, வேகமாக காற்று வீசியதால், அணை நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நித்தீஷ்குமார் அணை நீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்த, தகவலின்பேரில் சம்பவயிடத்துக்கு சென்ற பவானிசாகர் போலீசார் நீரில் மூழ்கி மாயமான நித்தீஷ்குமாரை மீனவர்கள் உதவியுடன் நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், 3-வது நாளாக இன்று காலை தேடும் பணி நடந்தது. அப்போது அணை நீர் தேக்க பகுதியில் வாலிபர் உடல் மிதப்பதை கண்ட மீனவர்கள் அப்பகுதிக்கு சென்று உடலை மீட்டனர்.. இதனையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.