அந்தியூர் அருகே அழுகிய நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு: போலீசார் விசாரணை

அந்தியூர் அருகே தோட்டத்தில் உடல் அழுகும் நிலையில் இறந்து கிடந்த கூலித்தொழிலாளி. போலீசார் விசாரணை.;

Update: 2022-05-27 04:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குன்றியூர் சின்னகவுண்டர்கொட்டாயை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 33). விவசாய கூலித்தொழிலாளி. கூலி வேலைக்கு செல்லும் செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, நேற்று மதியம் பட்லூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் செந்தில்குமார் இறந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் ஒருவர் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகும் நிலையில் இறந்து கிடந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News