பவானி அருகே சூறாவளி காற்றுடன் மழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

பவானி அருகே சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், கல்பாவி ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

Update: 2022-05-02 11:00 GMT
சூறாவளி காற்றால் சேதமடைந்த வீட்டினை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.தொடர்ந்து இரவு பெய்த மழையால் கல்பாவி ஊராட்சியில் கட்டிகவுண்டனூர் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்பட ஓட்டு வீடுகள் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது.


இதில் ஆறுமுகம் என்பவரது வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்தது. இருப்பினும் குடும்பத்தினர் எவ்வித காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் நூற்றாண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் கற்சிலைகள் முற்றிலும் உடைத்து சேதமடைந்தது. இதையடுத்து கிராம முழுவதும் கடந்த 10மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நீடித்து, விவசாயிகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை இதுவரை வருவாய் துறையினர் ஆய்வு செய்யவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மின்வெட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News