ஈரோடு மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி மாவட்டத்தில் வளர்ப்புப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது

Update: 2022-09-27 12:30 GMT

கோப்பு படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வெறிநோயை தடுத்திடும் விதமாக ஆண்டுதோறும் செப்.28 -ஆம் தேதியை உலக வெறிநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவ நிலையங்களில் நாளை இலவசமாக வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு கால்நடைகளை வெறி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என  அதில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News