கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் புகைப்படக்கண்காட்சி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் புகைப்பட கண்காட்சியை ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.

Update: 2022-04-21 13:30 GMT

டி.என்.பாளையத்தில் புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புள்ளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும்  தமிழ்நாடு முதலமைச்சர்  பதவியேற்ற நாள் முதல் மேற்கொள்ளப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்ற அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இப்புகைப்படக் கண்காட்சியினை சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து பயன்பெற்றனர்.பின்னர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு குறித்த அரசின் செய்தி மலர் குறும்படம் திரையிடப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News