கோபிச்செட்டிப்பாளையம்: பொதுமக்கள் சாலை மறியல்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாலப்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த பகுதியில் இருந்த குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீத்தாம் பாளையம்- நம்பியூர் சாலை யில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதுபற்றி தெரிய வந்ததும் சிறுவலூர் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கன் ஆகியோர் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.