கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

கழிவுநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுத்த, கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2022-04-01 11:45 GMT

கழிவுநீர் கால்வாய் அமைக்க தற்போது பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் 4வது வீதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்த ஊராட்சி மன்ற தலைவர் செல்விநடராஜன் மற்றும் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த நிலையில், தற்போது இதற்குகான பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News