பவானி-அந்தியூர் பிரிவில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பவானி-அந்தியூர் பிரிவில் திமுகவின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்ல சிவம் அரசின் திட்டங்களை பட்டியிலிட்டார்.

Update: 2022-05-19 19:45 GMT

பவானி-அந்தியூர் பிரிவில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து திமுகவின் தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி-அந்தியூர் பிரிவில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.திமுக நகர செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் , நகர்மன்ற தலைவர் சிந்தூரி மற்றும் தலைமை கழக பேச்சாளர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள மகளிருக்கான இலவச பேருந்து கட்டணம் , பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலை திட்டம் 150 நாள் ஆக அதிகரிப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்,  வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை, உயிர் இழந்த மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் முன் களப்பணியாளர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News