அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் கொடி அறிமுக விழா
கள் இறக்கும் தடையை மீட்டெடுப்போம் என அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனர் சதா நாடார் கூறினார்.;
அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனர் சதா நாடார் நிருபர்களிடம் கூறியதாவது: எந்தவொரு சமுதாயத்துக்கும் வரலாறு இல்லையேல், அந்த சமுதாயம் வளர்வது மிகவும் சிரமம். கொங்கு மண்டலத்தில், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம், நாடார் சமுதாய வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடும். கோபி தொகுதியில் எங்கள் சமூகத்தினர் 1.15 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாரும் எம்எல்ஏ மற்றும் எம்பி பதவியில் இதுவரையில் இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலையை உருவாக்குவோம். கள் இறக்கும் தடையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.