குட்கா, லாட்டரி விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் குட்கா, லாட்டரி விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-16 17:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக குட்கா, லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இதனையடுத்து குட்கா, லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குட்கா, லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கோபி நகர மக்கள் மற்றும் வணிகர்கள் இது சம்பந்தமாக தகவல் தெரிய வந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், இதுகுறித்து, 04285-222041, 94981-01232, 94981-09699, 98652-45676 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News