பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது: ஈரோடு ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள், வணிகர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Erode Today News, Erode News - ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள், வணிகர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் வரப்பெறும் 10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (5ம் தேதி) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் வரப்பெறும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்களை பெறுவதற்கு மறுக்கக் கூடாது. சட்டபூர்வமான நாணயங்களை ஏற்க மறுப்பது சட்டத்திற்கு எதிரானது.
எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் ஆகியோர் தங்களுக்கு எவரிடமிருந்தும் வரப்பெறும் 10 ரூபாய் நாணயங்களைப் மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.