தாமரைக்கரையில் புலிகள் காப்பகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
தாமரைக்கரையில் புலிகள் காப்பகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் நாளை கவனயீர்ப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புதிய புலிகள் காப்பக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அனைத்துக் கட்சியினரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாளை காலை தாமரைக்கரை அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.