அந்தியூர் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை: கையும் களவுமாக பிடித்தனர்

அந்தியூர் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2022-03-10 13:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நகலூர் மயானம் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, நகலூரை சேர்ந்த சிரில் ஜோசப் என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆறு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News