கோபிசெட்டிபாளையம் நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளும் நடைபெற்ற நகர்மன்ற தேர்தலில், திமுக வேட்பாளர்கள் 14 இடங்களில், காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 இடங்களில், அதிமுக வேட்பாளர்கள் 13 இடங்களிலும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் புதிதாக கவுன்சிலராக பதவியேற்க உள்ள நிலையில், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி கூட்ட அரங்கம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிதாக பதவியேற்க உள்ள கவுன்சிலர்களுக்கு நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ள நிலையில், நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அலுவலர் சோழராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல வருடங்களுக்கு பிறகு நகராட்சி அலுவலகம் புதுப்பொலிவு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.