அந்தியூர் அருகே பிரசவத்தில் கர்ப்பிணி பெண் சாவு

அந்தியூர் அருகே 8 மாத கர்ப்பிணி பிரசவத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-27 10:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சித்தகவுண்டனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26). இவரது மனைவி லட்சுமி (வயது 19). இந்நிலையில், 8 மாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமி, பிரசவத்திற்காக அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லட்சுமியை சேர்த்துள்ளனர். அங்கு லட்சுமிக்கு தனியார் ரத்த வங்கியில் ரத்தம் செலுத்திய போது அலர்ஜி ஏற்பட்டதால், உடனடியாக லட்சுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு லட்சுமியின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வயிற்றில் இருந்த குழந்தையை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லட்சுமி இன்று அதிகாலை 6 மணியளவில் இறந்ததாக மருத்துவர் தெரிவித்தனர். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் மற்றும் பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் திருமணமாகி ஒரு வருடம் ஆகியிருக்கும் நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Tags:    

Similar News