ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.6ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-05 04:00 GMT

நாளை மின்தடை (பைல் படம்).

Erode District Power Shutdown 

Erode Today News, Erode News - ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.6ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.6ம் தேதி) வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என கோபி மின்வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார். எனவே, மின்தேவை ஏதேனும் இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி கெட்டிச்செவியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கெட்டிச்செவியூர், சுள்ளிக்கரடு, பூச்சநாயக்கன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், லட்சுமாய்புதூர், நீலாம்பாளையம், வாக்கரைப்புதூர், செந்திலாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்கு பாளையம், ராசாகவுண்டன்பாளையம், செறைகோயில் மற்றும் பள்ளக்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News