தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மறுநாள் (9ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update: 2022-06-07 13:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சிறைமீட்டான்பாளையம், வளையக்காரபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் தளவாய்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வைரமங்கலம், சிறைமீட்டான்பாளையம், குண்டுசெட்டிபாளையம், கோட்டையம் பாளையம், சூளைமேடு, கவுண்டம்புதூர், குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வருகிற 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News