சத்தியமங்கலம் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி நாளை சனிக்கிழமை நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால், சத்தியமங்கலம், காந்தி நகர், ரங்கசமுத்திரம், கோணமூலை, விஐபி நகர், செண்பகபுதூர், அரசூர், உக்கரம், அரியப்பம்பாளையம், மாக்கினாம்கோம்பை, இண்டியம்பாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை, தாண்டான் பாளையம் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.