மின் இணைப்பு: விவசாயிகளுக்கு வரும் 23-ம் தேதி சிறப்பு முகாம்

விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, அதற்கான அறிவிப்பு பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் நேரில் அணுகி பயன் பெறலாம்.;

Update: 2021-12-18 12:45 GMT

கோப்பு படம் 

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த,  ஈரோடு மின் பகிர்மான வட்டம், நகரிய கோட்டத் துக்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு, பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், சர்வே எண், கிணறு மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடத்துகிறது.

அதன்படி, கவுந்தப்பாடி பிரிவு அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல்,  மாலை 3 மணி வரை முகாம் நடக்கிறது. விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, அதற்கான அறிவிப்பு பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் நேரில் அணுகி பயன் பெறலாம். சர்வே எண், உட்பிரிவு மற்றத்துக்கு வி.ஏ.ஒ., சான்று, வரைபடம் வழங்கினால், அன்றே மாற்றம் செய்யலாம். சர்வே எண், கிணறு மாற்றம் பழைய, புதிய கிணற்றுக்கான வி.ஏ.ஒ. சான்று, வரைபடம் வழங்கினால் 7 நாட்களில் மாற்றம் செய்யப்படும். எவ்வித மாற்றமும் தேவைப்படாத, முழுமையான ஆவணங்களும் பெற்று கொள்ளப்படும் என செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News