கால்நடை உதவியாளர் நேர்காணல் மீண்டும் ஒத்திவைப்பு: மனுதாரர்கள் ஏமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில், கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு நிர்வாக காரணத்தால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-28 00:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை, மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களில், மொத்தம், 19 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு, மொத்தம், 4,153 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான, நேர்காணல் தேர்வு, (26ம் தேதி) நேற்று முன்தினம் முதல், நாளை (29ம் தேதி) வரை, மாவட்ட கால்நடை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதற்காக, விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணலுக்காக அழைப்பு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேர்காணல் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள அறிக்கையில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி, பல்வேறு நிர்வாக காரணங்களால் மறுதேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்காக தேதி மீண்டும் அறிவித்து அதன் பின் நடைபெறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News