அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம்
தனியார் மயமாக்கலை கண்டித்து ஆகஸ்ட் 10-ம் தேதி நாடு முழுவதும் அஞ்சல் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அகில இந்திய இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் சத்ருக்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-
அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக அஞ்சல் சேமிப்பு பிரிவை முற்றிலும் தனியார் மாயமாக்கும் திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்த முனைந்துள்ளது.ஒன்றிய அரசின் கார்ப்பரேட் மற்றும் தனியார் மயமாக்கத்தை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே தடுத்த நிறுத்த முடியும். இதை கருத்தில் கொண்டு அஞ்சல் துறை அனைத்து சம்மேளனங்கள் இணைந்த அஞ்சல் கூட்டு போராட்ட நடவடிக்கை குழு அடுத்தமாதம் 10ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளன. இப்போராட்டத்தில் அதிகாரிகள் சங்கம் உட்பட அஞ்சல் துறையில் உள்ள அனைத்து சம்மேளனங்கள், தொழிற்சங்கங்களும் பங்கேற்க உள்ளன.
இவ்வாறு சத்ருக்கன் கூறியுள்ளார்.