பொங்கல் வந்தாச்சு: பல வண்ணங்களில் பொங்கல் பானைகள் ரெடி

ஈரோட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல வண்ணங்களில் பொங்கல் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன

Update: 2023-01-11 03:18 GMT

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பும், மண்பானையில் வைக்கும். பொங்கலும் தான் நினைவுக்கு வரும். அதன்படி. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 தினங்க களே உள்ள நிலையில், பொங்கல் கொண்டாட பண்டிகையை தமிழகத்தின் பல்வேறு கிராமப்புற மக்கள் தயாராகி வருகின்றனர்.

இதையடுத்து ஈரோட்டில் பொங்கல் பானைகள் விற்பனை தொடங்கி உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை மட்டுமே குறியாக வைத்து பொங்கல் பானைகள் தயாரித்து அந்த பானைகளுக்கு, பெண்களைக் சுவரும் வகையில் பல வண்ணங்கள் பூசி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் மற்றும் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமே மண்பானை செய்யும் தொழிலாக மாறி வந்த நிலையில், தற்போது பல ஓட்டல்களில் மண்பானை சமையலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஓரளவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிக்கைக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே, களிமண்னை கொண்டு வந்து உலர வைத்து அதனை பக்குவப்படுத்தி மண்பானை தயார் செய்யும் பணி தொடங்க வேண்டி உள்ளது. தற்போது கால மாற்றங்களால் மண்பானைக்கு பதில் காப்பர், ஸ்டீல் பாத்திரம் போன்றவை பல்வேறு ஆஃபர்களுடன் ஆன்லைனிலேயே விற்பனைக்கு வந்துள்ளன. இதில் இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் விலை பற்றி கவலைப்படாமல் வாங்குகின்றனர்.

ஆனாலும் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆர்வமுடன் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மண்பானைகளை தயார் செய்யும் பணிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்த மழையால் மண் பானை தயார் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு தாமதமாகத் தொடங்கியது. தற்போது பொங்கலை ஒட்டி பல்வேறு ரகங்களில் மண்பானைகனை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மேலும் பூந்தொட்டிகள், மண் அடுப்புகள், மண் தட்டுகள் போன்ற பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.

பைப் இணைக்கப்பட்ட குடிநீர் பானைகளை செய்து சைசிற்கு ஏற்ப ரூ.450 முதல் ரூ.550 வரை விற்பனை செய்யப்படுகிறது. வண்ணம் பூசப்பட்ட மூன்று பானைகள் கொண்ட ஒரு செட், 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.880 வரை பொங்கல் பானைகளை விற்பனை செய்கிறோம்.

சிலர் மண்பானைகளை குறிப்பிட்ட விலைக்கு சென்று அவற்றிற்கு பல வண்ணங்கள் பூசி அழகுபடுத்தி விற்பனை செய்கின்றனர் என்று கூறினார்

Tags:    

Similar News