பொங்கல் பண்டிகைக்காக ஈரோட்டில் வெல்லம் தயாரிப்பு தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், வெல்லம் தயாரிப்பு பணி தீவிரமாகி உள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தி,கோபி, கவுந்தப்பாடி, சித்தோடு, நசியனூர், காஞ்சிகோவில், பெருந்துறை, பூந்துறை, முள்ளாம்பரப்பு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பாசூர் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், தற்போது விவசாயிகள் அறுவடை செய்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில், ஈடுபட தொடங்கியுள்ளனர்.