அம்மாபேட்டை பேரூராட்சி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு என கூறி முற்றுகை

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக கூறி அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-29 15:30 GMT

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியினை வாக்காளர் அனுமதியின்றி, மாற்றம் செய்திருப்பதாக, கூறி திமுக அதிமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 50 வருடங்களாக ஒரே முகவரியில் 150-க்கும் மேற்பட்டோரின் வார்டு முகவரியை மாற்றம் செய்திருப்பதாக, கூறி முறையிட்டனர். இதனையடுத்து, மாற்றம் செய்யப்பட்ட வார்டுகளில் உள்ள வாக்காளர் முகவரியினை திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பது வாக்காளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News