நம்பியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த எலவமலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-06 09:30 GMT

கைது செய்யப்பட்ட சுப்பிரமணி

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அடுத்த எலவமலை அருகே உள்ள பெரியார்நகரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மணி என்கிற சுப்பிரமணி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News