அம்மாபேட்டை அருகே 11-ம் வகுப்பு மாணவி மாயம்: போலீசார் விசாரணை
அம்மாபேட்டை அடுத்த கொமராயனூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த கொமராயனூர் தேவலன்தண்டாகாலனியை சேர்ந்தவர் பெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா. இவர்களுடைய மகள் புவனேஸ்வரி (16) சென்னம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில், தற்போது தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த மாணவி நேற்று அதிகாலை மாயமானார். பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில் தாயார் புஷ்பா அளித்த புகாரின்பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.